இரண்டாம் நிலைத் தொழில்கள்
முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் முதல் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலை தொழில்கள் என்றும், தொழில் துறை என்றும் அழைக்கப்படுகின்றன.
உற்பத்தித் தேவைக்கான மூலப்பொருள்கள், மூலதனம், உடமைஆகியவற்றின் அடிப்படையில்
தொழில்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
மூலப்பொருள்கள் பயன்பாடு அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துதல்
* வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகள் - பருத்தி,சர்க்கரை,
உணவுபதப்படுத்துதல்
காடுசார்ந்ததொழிற்சாலைகள் - காகிதத்தொழில்,மரச்சாமான்கள், கட்டுமானப் பொருள்கள்
கனிமத் தொழில்கள் - சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்றதொழிற்சாலைகள்
கடல்சார் தொழிற்சாலைகள் - கடல் உணவுபதப்படுத்துதல்
முதல் நிலைத் தொழில்கள்
உணவுத் தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான
மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது முதல் நிலைத் தொழில்கள் எனப்படுகிறது.
வேளாண்மை
* கால்நடைகள் வளர்த்தல்
* மீன் பிடித்தல்
* கனிமங்கள், தாதுப்பொருட்கள் போன்ற மூலப்பொருள்கள் சேகரித்தல்
கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர்,பிசின் போன்றவை சேகரித்தல்,மரம் வெட்டுதல்.
மூன்றாம் நிலைத் தொழில்கள்
முன்னர் கூறிய இரண்டுநிலைகளில், குறிப்பாக தொழில் துறையில், பொருட்களை உற்பத்திசெய்வதற்கும்
உற்பத்திப் பொருள்களை தேவையான மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குவதால் இவை சேவைத் துறைதொழில்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறைவழங்குகிறது.
* போக்குவரத்து-சாலை,ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்
* தொலைத்தொடர்பு-அஞ்சல்,தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம்
வர்த்தகம் - பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனைசெய்தல் வங்கி பணப் பரிமாற்றம், வங்கிச் சேவைகள்
JOIN WHATSAPP : CLICK HERE
JOIN TELEGRAM : CLICK HERE
JOIN INSTAGRAM : CLICK HERE
SUBSCRIBE YOUTUBE : CLICK HERE
FOR MORE POSTS : CLICK HERE
0 Comments