இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.
6th term 2 Unit 3 (History)
பாடம் : குடித்தலைமையில்
இருந்துபேரரசுவரை
கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
பண்டைய பெயர் தற்போதையபெயர்
ராஜகிரகம் ராஜ்கிர்
பாடலிபுத்திரம் பாட்னா
கலிங்கம். ஒடிசா
உலகம் அந்நாளில்:
ஒலிம்பியாவின் ஜியஸ் (Zeus) கோயில் :
கிரிஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் கி.மு (பொ.ஆ.மு) ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் ஜியஸ் என்ற கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
யக்ஷன் என்பது நீர்,வளம்,மரங்கள், காடுகள்,காட்டுச் சூழல்
ஆகியவற்றோடு தொடர்புடைய கடவுள் ஆவார். யக்ஷி என்பது யஷாவின் பெண் வடிவமாகும்.
உலகம் அந்நாளில்:
சீனப் பெருஞ்சுவர்:
இது பழங்காலத்தில் கட்டப்பட்ட தொடர்ச்சியான பலகோட்டைச் சுவராகும். குன் - சி - ஹங் என்னும்
பேரரசர் தனது பேரரசின் வட எல்லையை பாதுகாப்பதற்காக கி.மு (பொ.ஆ.மு) மூன்றாம் நூற்றாண்டில்
இந்தச் சுவர்களை இணைத்தார்.
சிங்கமுகத்தூண்:
சாரநாத்திலுள்ள அசோகருடைய தூணின் சிகரப் பகுதியில் அமைந்துள்ள சிங்க உருவங்கள் இந்திய தேசிய சின்னமாகவும் வட்ட வடிவ அடிப்பகுதியில் இடம் பெற்றுள்ள சக்கரம் இந்தியாவின் தேசியக் கொடியின் மையச் சக்கரமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அசோகர் கல்வெட்டுகளில் எழுத்துமுறை :
சாஞ்சி - பிராமி
காந்தகார் -கிரேக்கம் மற்றும் அராமிக்
வடமேற்குப் பகுதிகள் - கரோஸ்வதி
“அசோகர் ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல இன்றுவரை ஒளிர்கிறார்”
H.G. வெல்ஸ் - வரலாற்றறிஞர்
பேராணை-அரசால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட ஆணை அல்லது பிரகடனம் ஆகும்.
பாடலிபுத்திரத்தின் பிரம்மாண்டம்:
மெளிரியப் பேரரசின் மாபெரும் தலைநகரமான பாடலிபுத்திர நகருக்கு 64 நுழைவுவாயில்களும் 570
கண்காணிப்புகோபுரங்களும் இருந்தன.
மெகஸ்தனிஸ்
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக சந்திரகுப்தமௌரிய அரசவையில் இருந்தவர்.
கிரேக்க ஆட்சியாளர் செலுக்கஸ் நிகேட்டரின் தூதுவராக சந்திரகுப்தமௌரிய அரசவையில் இருந்தவர்.
பதினான்கு ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார். அவர் எழுதிய நூலின் பெயர் இண்டிகா. மௌரியப் பேரரசைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள இந்நூல் ஒரு முக்கியச் சான்றாகும்.
'கணா' என்னும் சொல் ‘சரிசமமான சமூக அந்தஸ்தைக் கொண்ட மக்களைக் குறிக்கும்.
‘சங்கா' என்றால் ‘மன்றம்' என்றுபொருள்.
கணசங்கங்கள் சிறிய நிலப்பகுதியில் மேட்டுக்குடி மக்களைக் கொண்ட குழுவால்
ஆளப்பட்டது. கணசங்கங்கள் சமத்துவமரபுகளைப் பின்பற்றின
மௌரியப் பேரரசு
சான்றுகள்
தொல்லியல் சான்றுகள் முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்
கல்வெட்டுகள்
அசோகரின் கல்வெட்டுப் பேராணைகள், ஜுனாகத்
கல்வெட்டு ஆகியவை.
மதச்சார்பற்ற இலக்கியங்கள்
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் விசாகதத்தரின் முத்ராராட்சஷம்
மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்
மதம் சார்ந்த இலக்கியங்கள் -சமண, பௌத்த நூல்கள், புராணங்கள்
வெளிநாட்டுச் சான்றுகள்.
தீபவம்சம்,மகாவம்சம், இன்டிகா
நாளந்தா- யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம் :
நாளந்தா பண்டைய மகதநாட்டில் இருந்த பௌத்தமடாலயம் ஆகும். குப்தர்களின் காலத்தில் அது மிகப்
புகழ் பெற்ற கல்வி மையமாகத் திகழ்ந்தது. நாளந்தா என்னும் சமஸ்கிரதச் சொல் நா+அலம்+தா என்ற மூன்று சமஸ்கிருத சொற்களின் இணைப்பில் உருவானது. இதன் பொருள் "வற்றாத அறிவை அளிப்பவர்” என்பதாகும்.
மௌரியப் பேரரசு-
இந்தியாவின் முதல் பேரரசு
தலைநகர்
பாடலிபுத்திரம் (தற்போதையபாட்னா)
அரசு : முடியாட்சி
வரலாற்றுக் காலம்
ஏறத்தாழ கி.மு (பொ.ஆ.மு) 322 முதல் 187 வரை
முக்கிய அரசுகள்
சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
Stay connected with us by clicking below links
0 Comments