இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.
6th term 3 unit 1 (History)
பாடம் : பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
தாமோதரம் பிள்ளை (யாழ்ப்பாணம்)
உ.வே.சாமிநாத அய்யர் ஆகியோர்
அரும்பாடுபட்டு பனையோலைகளில்
எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டனர்.
தொல்காப்பியம் ஒரு தமிழ் இலக்கண நூலாகும். அது சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
கலிபோர்னியாபல்கலைக் கழகத்தின் தமிழ்மொழிப் பேராசிரியர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்பார் தமிழ்மொழியானது இலத்தீன் மொழியின் அளவிற்குப் பழைமையானது எனும் கருத்தைக்
கொண்டுள்ளார். ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான ஒரு மரபாக அது உருபெற்று எழுந்துள்ளது என அவர் கூறுகிறார்.
முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்
• இளஞ்சேட்சென்னி
• கரிகால் வளவன்
• கோச்செங்கணான்
• கிள்ளிவளவன்
• பெருநற்கிள்ளி
முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்
• உதயன் சேரலாதன்
• இமயவரம்பன்
• நெடுஞ்சேரலாதன்
• சேரன் செங்குட்டுவன
• சேரல் இரும்பொறை
கல்லணை
இது கற்களால் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். பாசனத்திற்காக
கழிமுகப் பகுதி வழியாக நீரைத் திருப்பி விடுவதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே இவ்வணை
கட்டப்பட்டது. கல்லணை கட்டப்பட்டபோது 69,000 ஏக்கர் நிலத்திற்கு அது நீர்ப்பாசன
வசதியை வழங்கியது.
மூவேந்தர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்
சேரர்கள்
• ஆதவன்
• குட்டுவன்
• வானவன்
• இரும்பொறை
சோழர்கள்
• சென்னி
• செம்பியன்
• கிள்ளி
• வளவன்
பாண்டியர்கள்
• மாறன்
• வழுதி
• செழியன்
• தென்னர்
முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள்
நெடியோன்
நன்மாறன்
முதுகுடுமிப் பெருவழுதி
நெடுஞ்செழியன்
சேரர்
மாலை
பனம்பூ மாலை
துறைமுகம்
முசிறி /தொண்டி
தலைநகர்
வஞ்சி / கரூர்
சின்னம்
வில், அம்பு
சோழர்
அத்திப்பூ மாலை
புகார்
உறையூர் / புகார்
புலி
பாண்டியர்
வேப்பம்பூ மாலை
கொற்கை
மதுரை
இரண்டு மீன்கள்
திணை
நிலம் தொழில் மக்கள் கடவுள்
குறிஞ்சி
மலையும் மலை சார்ந்த இடமும்
வேட்டையாடுதல் /சேகரித்தல்
குறவர், குறத்தியர் முருகன்
முல்லை
காடும், காடு சார்ந்த இடமும்
ஆநிரை மேய்த்தல்
ஆயர், ஆய்ச்சியர்
மாேயான்
மருதம்
வயலும் வயல் சார்ந்த இடமும்
வேளாண்மை
உழவன், உழத்தியர்
இந்திரன்
நெய்தல்
கடலும் கடல் சார்நத பகுதியும்
மீன்பிடித்தல் / உப்பு உற்பத்தி
பரதவர், நுளத்தியர்
வருணன்
பாலை
வறண்ட நிலம்
வீரச் செயல்கள்
மறவர், மறத்தியர்
கொற்றவை
சங்க காலப் பெண்பாற்புலவர்கள்
அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.
வீரக்கல் / நடுகல்
பண்டைக்காலத் தமிழர்கள் போர்க்களத்தில் மரணமுற்ற வீரர்கள்மேல் பெரும்மரியாதை
கொண்டிருந்தனர். போரில் மரணமடைந்த வீரனின் நினைவைப் போற்றுவதற்காக நடுகற்கள் நடப்பட்டன.
மலபார் கருமிளகு
எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது, தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியினுள்ளும் அடிவயிற்றிலும்
கருமிளகுக்கதிர் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். (இவ்வாறு பதப்படுத்தி உடலைப்
பாதுகாப்பது பண்டைய நாட்களில்
பின்பற்றப்பட்ட முறையாகும்).
எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸின் பதப்படுத்தப்பட்ட உடல் திறக்கப்பட்டபோது, தொல்லியல் அறிஞர்கள் அவருடைய நாசியினுள்ளும் அடிவயிற்றிலும்
கருமிளகுக்கதிர் அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். (இவ்வாறு பதப்படுத்தி உடலைப்
பாதுகாப்பது பண்டைய நாட்களில்
பின்பற்றப்பட்ட முறையாகும்).
இந்திய வணிகர்களால் ரோமப்
பேரரசுக்கு விநியோகம் செய்யப்பட்ட பட்டு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது.
ரோமப்பேரரசர் ஆரிலியன் இந்தியப்
பட்டானது, எடைக்கு எடை தங்கம் கொடுத்துப் பெற தகுதியானது என அறிவித்தார்
முசிறி - முதல் பேரங்காடி
ரோம் நாட்டைச் சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய இயற்கை வரலாறு
(Natural History) எனும் நூலில் முசிறியை ‘இந்தியாவின் முதல் பேரங்காடி’ எனக் குறிப்பிட்டுள்ளார். ரோமானியரின் குடியிருப்பு இருந்த முசிறியில் அகஸ்டஸ் கடவுளுக்காகக்
கோவிலொன்று கட்டப்பட்டிருந்தது.
கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ்
ஒப்பந்தப் பத்திரத்தில் (வியன்னாவிலுள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது)
அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவருக்கும் முசிறியைச் சேர்ந்த ஒரு வணிகருக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருஞ்சொற்பொருள்
கடும் முயற்சி - strove - tried hard
ராஜ வம்சம் - dynasty - a line of hereditary rulers
கெளரவிப்பதற்காக - commemorate - to honour the memory of
அரச சின்னம் - royal insignia - symbols of power
ஆதரவு - patronage - support given by a patron
வெளிக்காட்டுதல் - blazoned - displayed vividly
விடுதலை - acquitted - released
புலவர்கள் - bards - poets singing in praise of princes
and brave men
சேமிப்புக் கிடங்கு - warehouses - a large building for keeping goods
சித்தரிக்கப்பட்டுள்ளது - portrayed - described elaborately
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
0 Comments