இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.
6th term 3 Unit 3 (History)
பாடம் : பேரரசுகளின் காலம் (குப்தர்,வர்த்தனர்)
கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
பிரசஸ்தி/மெய்க்கீர்த்தி : பிரசஸ்தி என்பது ஒருசமஸ்கிருதச் சொல், அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப்
‘புகழ்வதாகும். அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்துபாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர். இவைபின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காகத் தூண்களில் பொறிக்கப்பட்டன.
லிச்சாவி பழமையான கனசங்கங்களில் ஒன்றாகும். அதனுடைய ஆட்சிப் பகுதி கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.
இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீ மேகவர்மன் எனும் பௌத்த அரசன் சமுத்திர குப்தரின் சம காலத்தவராவார்.
இரண்டாம் சந்திகுப்தரின் பட்டப் பெயர்கள் :
விக்கிரமாதித்தியர், நரேந்திரசந்திரர், சிம்மசந்திரர், நரேந்திரசிம்மர்.விக்கரம தேவராஜர்,தேவகுப்தர், தேவஸ்ரீ
குப்தர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் :
இரும்பு, தங்கம், தாமிரம்.தகரம்,ஈயம் பித்தளை,செம்பு,மணிவெண்கலம்,மைக்கா,மாங்கனீசு,சிகப்புச் சுண்ணம் ஆகியவையாகும்.
ஹர்ஷர் சீனப்பயணி யுவான் சுவாங்கை முதன் முதலாக ராஜ்மகாலுக்கு (ஜார்கண்ட்) அருகேயுள்ள கஜன்கலா என்ற இடத்தில் சந்தித்தார்.
குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் சமுத்திரகுப்தர் ஆவார்.
குஷாணர்களின் நாணயங்கள் சமுத்திர குப்தருக்கு உந்து தலை வழங்கின. குப்தர்களின் பொற்காசுகள் தினாரா என்றழைக்கப்பட்டன. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகளை விட வெள்ளி, செப்புக் காசுகள்
குறைவாகவே வெளியிடப்பட்டன. குப்தர்களுக்கு அடுத்து வந்த காலத்தில் பொற்காசுகளின் சுழற்சியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது பேரரசினுடைய வளங்களின் வீழ்ச்சியைச் சுட்டிக் காட்டுவதாய் உள்ளது.
நாளந்தாபல்கலைக்கழகம்
• நாளந்தாபல்கலைக்கழகம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசின் ஆதரவில்
தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசியைச் சேர்ந்தபேரரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது
• நாளந்தாவில் பௌத்தத் தத்துவமே முக்கியப் பாடப்பிரிவாக இருந்தது. யோகா,வேத இலக்கியங்கள், மருத்துவம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. அப்பல்கலைக்கழகத்தில் யுவான் - சுவாங் பௌத்ததத்துவத்தைப் பற்றிப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
• அந்தவளாகத்தில் எட்டு மகாபாடசாலைகளும் மூன்று மிகப்பெரிய நூலகங்களும் இருந்தன.
• நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜி என்பாரின் தலைமையில் வந்தமம்லுக்குகள் என அழைக்கப்பட்ட துருக்கிய இஸ்லாமிய அடிமை வீரர்களால் அழித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.
நாளந்தா யுனெஸ்கோவின் உலகப்பாரம்பரியச் சின்னமாகும்
விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த நவரத்தினங்கள் :
காளிதாசர்- சமஸ்கிருதப் புலவர்
ஹரிசேனர் -சமஸ்கிருதப் புலவர்
அமரசிம்ஹர் -அகராதியியல்
ஆசிரியர்
தன்வந்திரி -மருத்துவர்
காகபானகர் -சோதிடர்
சன்கு - கட்டடக் கலைநிபுணர்
வராகமிகிரர் -வானியல் அறிஞர்
வராச்சி -இலக்கண ஆசிரியர்
மற்றும் சமஸ்கிருதப் புலவர்
விட்டல்பட்டர் -மாயவித்தைக்காரர்
(Magician)
ஹுணர்கள் என்போர் யாவர்? ஹுணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினராவர். தங்கள்
பெரும் தலைவர் அட்டில்லாவின் தலைமையில் இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர். இவர்களோடு தொடர்புடைய வெள்ளை ஹுணர்கள் மத்திய ஆசியாவழியாக
இந்தியா வந்தனர். தங்கள் தொடர் படையெடுப்புகளின் மூலமாக எல்லையோர நாடுகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர். ஸ்கந்தகுப்தரைத் தோற்கடித்த பின்னர் இவர்கள் மத்திய இந்தியப் பகுதிகளில் பரவினர். அவர்களின் தலைவரான தோரமானர் தனக்குத் தானே அரசராகமுடி சூட்டிக் கொண்டார். அவருக்குப் பின்னர் அவரதுமகன் மிகிரகுலர் ஆட்சி செய்தார். முடிவில், மத்திய இந்தியாவில் மாளவத்தை ஆட்சி செய்து வந்த யசோதர்மன் அவர்களைத் தோற்கடித்து அவர்களின் ஆட்சிக்குமுடிவு
கட்டினார்.
'புனிதயாத்ரீகர்களின் இளவரசன்' என்றழைக்கப்படும் யுவான் சுவாங், ஹர்ஷரின் ஆட்சியின்போது
இந்தியாவுக்கு வந்தார். சி- யு - கி எனும் அவரது பயணக் குறிப்புகள் அடங்கிய ஆவுணங்களின் தொகுப்பு, ஹர்ஷர் காலத்து இந்தியாவின் சமூகபொருளாதார,மத, பண்பாட்டுநிலைகள் குறித்து விரிவான செய்திகளை வழங்குகிறது. ஹர்ஷர் ஒரு பௌத்தராக வழங்குகிறது. ஹர்ஷர் ஒரு பௌத்தராக இருத்த போதும்,பிரயாகையில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளாவிழாவில் கலந்துகொள்ளச் சென்றார் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.
கன்னோசி பௌத்தப் பேரவையில் 20 அரசர்கள் பங்கேற்றனர். பெரும் எண்ணிக்கையில் பௌத்த, சமண,வேதஅறிஞர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பௌத்தமடாலயம் ஒன்றில் புத்தரின் தங்கச் சிலையொன்று நிறுவப்பட்டது. புத்தரது மூன்றடி உயரம் கொண்ட வேறொரு சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
பிரயாகைப் பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களைப் பௌத்தத் துறவிகளுக்கும் வேதவித்தகர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடையாக விநியோகித்தார். நான்கு நாட்கள் நடைபெற்ற அந்த நிகழ்வில் அனைத்து நாட்களிலும் அவர் பௌத்தத்துறவிகளுக்கு, அளவிடமுடியாத பரிசுகளை அள்ளிக் கொடுத்தார்
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
0 Comments