இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.
6th term 3 unit 2 (History)
பாடம் : இந்தியா- மௌரியருக்குப் பின்னர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள மலைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.
கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்
இந்தியா- மௌரியருக்குப் பின்னர்
பார்குத், சாஞ்சி ஆகிய இடங்களிலுள்ள பௌத்த ஸ்தூபிகளில் காணப்படுவது போல ஸ்தூபிகளின் சுற்றுச்சுவர்களிலும்
வாயில்களிலும் கற்களுக்குப் பதிலாக மரத்தைப் பயன்படுத்தும் முறை சுங்கர் காலத்தில் நடைமுறைக்கு வந்தது.
உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயரச் சிற்பங்கள் பாமியான் பள்ளத்தாக்கிலுள்ள மலைகளில் செதுக்கப்பட்டுள்ளன.
இம்மலைகள் பண்டைய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறத்தில் அமைந்திருந்தது. (தற்போது இப்பகுதி ஆப்கானிஸ்தானின் மையத்தில் உள்ளது.அண்மையில் இவற்றைத் தாலிபான்கள் உடைத்து நொறுக்கினர்.) இச்சிற்பங்கள்
மௌரியர் காலத்துக்கு பின்னரான காந்தாரக் கலைப்பள்ளியைச் சேர்ந்த அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களால் திடமான பாறைகளில் செதுக்கப்பட்டவை ஆகும்.
இந்தோ-கிரேக்க அரசர்கள்:
முதலாம் டெமிட்ரியஸ்: இவர் கிரேக்கோ-பாக்டீரிய அரசர் யுதி டெமஸ் என்பாரின் மகனாவார். இவர் கி.மு.(பொ.ஆ.மு) 294 முதல் 288 வரை மாசிடோனியாவின் மன்னராக இருந்தார். டெமிட்ரியஸ் சதுர
வடிவிலான இரு மொழி வாசகங்களைக் கொண்ட நாணயங்களை வெளியிட்டார்
என்பதை நாணயச் சான்றுகள் உறுதி செய்கின்றன. நாணயத்தின் தலைப் பகுதியில் கிரேக்க மொழியும் பூப்பகுதியில் கரோஷ்தி மொழியும் இடம் பெற்றுள்ளன. டெமிட்ரியஸ் எனும் பெயரில் மூவர் இருந்துள்ளனர். எனவே, இம்மூவருள் யார் கி.மு. (பொ.ஆ.மு) இரண்டாம் நூற்றாண்டில்
தொடங்கும் யவன சகாப்தத்தைத் தொடங்கிவைத்தவர் என்பதை வரலாற்று அறிஞர்களால் முடிவு செய்ய முடியவில்லை.
மினான்டர்: இவர் நன்கறியப்பட்ட இந்தோ-கிரேக்க அரசர்களில் ஒருவராவார். வடமேற்குப் பகுதியில்
பெரியதொரு அரசை இவர் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இவர் வெளியிட்ட நாணயங்கள் பரந்து விரிந்த பகுதியில் கிடைக்கின்றன. காபூல் பள்ளத்தாக்கில் தொடங்கி சிந்துநதி கடந்து மேற்கு உத்தரப்பிரதேசம் வரையிலான பகுதிகளில் கிடைத்தன. மிலிந்த பன்கா எனும் நூல் ஒன்று உள்ளது. பாக்டீரிய அரசன் மிலிந்தா என்பவருக்கும் பௌத்த அறிஞர் நாகசேனாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலே அந்நூலாகும். இந்த மிலிந்தாவே மினான்டர் என அடையாளப்படுத்தப்படுகிறது. மினான்டர் பௌத்தராக மாறி பௌத்தத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றியதாகக் கருதப்படுகிறது.
இந்தோ-பார்த்திய (பகலவர்) அரசர்கள்:
இந்தோ-கிரேக்கர், இந்தோ-சைத்தியர் ஆகியோருக்குப் பின்னர் இந்தோ பார்த்தியர் வந்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பாதியில் குஷாணர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இந்தோ-பார்த்திய அரசு அல்லது கோன்டோபரித் வம்சம் கோண்டோ பெர்னஸால் நிறுவப்பட்டது. இந்தோ-பார்த்தியர் ஆட்சி செய்த பகுதி காபூல், காந்தாரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
கோண்டோ பெர்னெஸ் எனும் பெயர் கிறித்துவ உபதேசியார் புனித தாமசுடன் தொடர்புடையதாகும். கிறித்துவ மரபின்படி புனித தாமஸ் இந்தியவிற்கு வருகை புரிந்தார். கோண்டோ பெர்னெஸின் அரசவைக்கு அவரது வருகையால் மன்னர் கிறித்துவத்தை தழுவினார்.
அரசர்கள் பங்களிப்புகள்:
முதலாம் கட்பிசஸ் குஷாணர்களில் மிகவும் புகழ்பெற்ற முதல் அரசியல் மற்றும் இராணுவத் தளபதி இவரேயாவார். அவர் இந்தோ-கிரேக்க, இந்தோ-பார்த்திய அரசர்களை வெற்றிகொண்டு பாக்டீரியாவில் இறையாண்மையுடன் கூடிய அரசராக தன்னை நிலைநிறுத்தினார். தன்னுடைய ஆதிக்கத்தை முதலில் காபூல்,
காந்தார தேசம் தொடங்கி, பின்னர் சிந்து வரையிலும் பரப்பினார்.
இரண்டாம் கட்பிசஸ் இவர் சீன, ரோமானிய அரசர்களுடன் நட்புறவை மேற்கொண்டார். அயல்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தார். அவருடைய நாணயங்கள்
சிலவற்றில் சிவபெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அரசருடைய பட்டப்பெயர்கள் கரோஷ்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
குஷாணப் பேரரசு ஜுலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின்
சமகாலத்தியதாகும். குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
அருஞ்சொற்பொருள்
விரட்டியடிக்கப்பட்டது - repulsed - driven back by force
விரட்டியடிக்கப்பட்டது - repulsed - driven back by force
முறியடிக்கப்பட்டது - thwarted - prevent from accomplishing something
ஆக்கிரமிப்புகள் - encroachments - intrusion on a person’s territory, rights etc,
புதுப்பிக்கப்பட்டது - renovated - Restored (something old, especially a building) to a good state of repair
ஒன்றிப்போதல் - assimilate - absorb (information, ideas or culture) fully
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
0 Comments