Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

6TH SCHOOL BOOK TERM 3 BOX NOTES IN TAMIL (உங்களுக்கு தெரியுமா?) (ஆசியா & ஐரோப்பா ) (புவியியல்)

இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.

6th term 3 Unit 1 (Geography)

பாடம் : ஆசியா & ஐரோப்பா

கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
 

  HARDWORK IS KEY TO SUCCESS

 
‘முடிச்சு' என்பது மலைத் தொடர்கள் கூடும் / பிரியும் இடங்கள் ஆகும்.

 
ஒன்றிணைக்கப்பட்ட பல தீவுகள்,தீவுக்கூட்டம் என அழைக்கப்படுகின்றது. இந்தோனேசியா மிகப்பெரியத் தீவுக்கூட்டம் ஆகும்.

 
திபெத் 'உலகின் கூரை' என அழைக்கப்படுகின்றது. அங்கு நிலவும் கடுங்குளிரின் காரணமாகவும்,நன்னீரின் மிகப்பெரும் இருப்பிடமாகவும், மக்கள் வாழ இயலாத சூழல்
காணப்படுவதாலும் திபெத் ‘மூன்றாம் துருவம்' என்றும் அழைக்கப்படுகின்றது.

 
முப்பள்ளத்தாக்கு நீர்த் தேக்கமானது யாங்சி ஆற்றின் குறுக்கே
கட்டப்பட்டுள்ளது. இஃது உலகின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும். இது சீனாவின் மின்சார தேவையில் 10 சதவீதத்தைப் பூர்த்திசெய்கிறது.
 

 
ரூப - அல் - காலிபாலைவனம் உலகின் மிகத்தொடர்ச்சியான
மணற்பாங்கான பாலைவனமாகும். இது சௌதி அரேபியாவின் தென்கிழக்குப் பகுதியில்
காணப்படுகிறது

 
தகவல் பேழை : பாலைவனம்

பாலைவனப் பிரதேசம் என்பது மிகக் குறைந்த மழைப்பொழிவைப் பெறும் பகுதியாகும். இங்குக் குறைந்த அளவிலேயே தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன.
ஆசியாவில் இரண்டு வகையான பாலைவனங்கள் உள்ளன. வெப்பப் பாலைவனம் மற்றும் குளிர் பாலைவனம்

 
கருங்காடுகள் : கருத்த நிறமுடைய செழித்துவளரும் அத்தி மற்றும் பைன் மரங்கள் இப்பகுதிக்குக் கருமை நிறத்தை அளிக்கின்றன.

 
அங்கோர்வாட் : இஃது உலகப் பாரம்பரிய தளமாகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னரால் கி.பி (பொ.ஆ) 1100 ம் ஆண்டில் கம்போடியாவில் கட்டப்பட்டது. கெமர் மொழியில் 'அங்கோர்வாட்' என்றால் கோயில்களின் நகரம்' எனப் பொருள். இதுவேஉலகின்
மிகப்பெரிய கோயிலாகும்.

 
மோட்டர்ஹார்ன் : பிரமிடு வடிவத்தில் காணப்படும் மேட்டர்ஹார்ன் மலைசுவிஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 4478 மீஆகும். இம்மலை இதன் வடிவத்திற்குப் புகழ் பெற்றதாகும்.


 
பனாவ் படிக்கட்டுமுறைநெல் விவசாயம் :

இப்கௌஸ் என்ற பிலிப்பைன்ஸ் மக்களால் 2000 ஆண்டுகளுக்கு முன் இது உருவாக்கப்பட்டதாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1524 மீ உயரத்தில் அமைந்துள்ளது.

 
தகவல் பேழை:

ஃபியார்ட் (fiord) (பிளவுபட்டகடற்கரை) செங்குத்தான பாறைகளுக்கிடையே
(பனியாற்றுச் செயல்பாடுகளின் காரணமாக) உள்ள குறுகிய, ஆழமான கடற்கரை பிளவுபட்ட கடற்கரை எனப்படும்.

பின்வரும் வழிகளில் பயன்படுகிறது
1.இவைகாற்று எத்திசையிலிருந்து வீசினாலும் அதன் வேகத்தைக் குறைக்கின்றன.
2. கடல் அலைகளின் வேகத்தையும் இவை கட்டுக்குள் வைக்கின்றன. எனவே, இப்பிளவுபட்ட கடற்கரையானது இயற்கை துறைமுகங்கள் அமைவதற்கு ஏற்றதாக உள்ளது.

 
தகவல் பேழை
வடஅட்லாண்டிக் வெப்பக்கடல் நீரோட்டம் ஐரோப்பாவின் மேற்குப்
பகுதிக்கு மிதமான வெப்பத்தை அளிக்கின்றது. மேலும்.மேற்கத்திய காற்று ஐரோப்பா முழுவதும் வெப்பத்தைக் கடத்துகின்றது.

 
காலநிலைபிரிப்பான் : ஆல்ப்ஸ் மலைத்தொடர் மத்தியத் தரைக்கடல் காலநிலையையும் வடஐரோப்பாவில் காணப்படும் குளிர்ந்த காலநிலையும் பிரிக்கின்ற ஒரு அரணாக உள்ளது

Check our All posts : 

TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here

TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here

Unitwise notes for all exams : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here

TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here 

 TNPSC maths previous year questions previous year solved pdf : click here.

TNPSC group 1 Question bank : click here 

TNPSC group 2 Question bank : click here 

TNPSC group 4 Question bank : click here 

TNPSC topicwise Question bank : click here 

TNPSC maths videos (25/25) : click here 

TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here 

TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here 

6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here 

TamilNadu Govt notes for Group 1,2,4 : click here 

unit 8 notes pdf : click here 

Unit 9 notes pdf : click here

Daily free test : click here 

6th to 12th Do you know notes : click here 

6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here 

Thirukkural Notes 1330 : click here 

For more notes : click here.


Stay connected with us by clicking below links
 
Join with us on Link
Join whatsapp Click here
Join Telegram  Click here
Follow Instagram  Click here
Subscribe YouTube  Click here
For more posts Click here

Post a Comment

0 Comments