In this post, We are sharing Police Constable (PC exam ) Syllabus in Tamil.
Our notes are very helpful for those who are preparing for TNPSC GROUP 1 , GROUP 2 , GROUP 3 , GROUP 4 and VAO , GROUP 7 & 8 and etc......
We shared Syllabus , Previous year Questions , Notes , 6 th to 12th school books pdf both Tamil and English medium , Details , Topic wise notes , Unit 8 and 9 notes for TNPSC exams . Please check that posts also. Links are given below.
இரண்டாம் நிலை காவலர் (ஆண் பெண், இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண் பெண்), மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு பாடத்திட்டம்.
Title |
No of Questions |
Genreral studies |
50 |
Aptitude and logical reasoning |
30 |
Total |
80 Questions |
மாதிரி வினாத்தாள் :
பொது அறிவு (General Knowledge)
பகுதி-அ)
இரண்டாம் நிலை காவலர் (ஆண்/பெண்), இரண்டாம்நிலை சிறைகாவலர் (ஆண்/பெண்), மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்விற்குரிய எழுத்துத்தேர்வு 10-ம் வகுப்பு வரைக்கான பாடத்திட்ட தரத்தில் இருக்கும்.
1 தமிழ் : செய்யுள்நூல் இயற்றிய ஆசிரியர்களின் பெயர்கள், செய்யுள்நூல் விவரங்கள், தமிழ் முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியரின் பெயர்கள் மற்றும் இலக்கண குறிப்புகள்.
உதாரணம் :
1. தொலைவில் உள்ளது பசுவோ? எருதோ? என வினவுவது என்ன வினா?
A) அறிவினா B) கொடைவினா C) ஐயவினா D) ஏவல்வினா
2. நெய்தல் நிலத்துக்குரிய தொழில் யாது?
A) கிழங்கு அகழ்தல் B) உப்பு விளைத்தல் C) களைபறித்தல் D)நிரை கவர்தல்
3. திரிகடுகத்தை இயற்றியவர் ?
A) காரியாசான் B) நல்லாதனார் C) நாதனார் D) கணிமேதாவியார்
2. ஆங்கிலம் : ஆங்கிலகவிதை இயற்றிய ஆசிரியரின் பெயர்கள், ஆங்கில முக்கிய நூல்கள் மற்றும் இயற்றிய ஆசிரியர்கள் பெயர்கள், ஆங்கில இலக்கண குறிப்புகள்.
உதாரணம் :-
1. How many lines does a Sonnet have?
A) 10 B) 14 C) 12 D) They vary
2. Who was the author of "The God of small things'?
a) Vikram Seth B) Arudhati Roy C) Kiran Desai D) Chetan Bhagat
3. Which country gives the highest literary award "Man Booker Prize"?
A) Britain B) Germany C) USA D) France
3. கணிதம்: சிறிய கணக்குகள்,
1. x = 5, Y=4 என்ற நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி
A) (4,5) BI (5,4) C) (-5,4 D) (4.-5)
2. 7,11,13,17__?
A) 23 B) 19 C) 27 D) 16
3. இராமன் துணி துவைக்கும் இயந்திரத்தை ரூ. 13500/- க்கு வாங்குகின்றார். இதனை 12% நஷ்டத்திற்கு விற்றார். எனில்
துணிதுவைக்கும் இயந்திரத்தின் விற்பனை விலை என்ன?
A) 11,880 B) 11,800 C) 13,500 D) 11,890
4. பொது அறிவியல்: நம் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளில் அறிவியல் ரீதியாக புரிந்துகொள்ளும் திறன்,
உணரும் திறன் உள்ள நல்ல கல்வித் திறன் பெற்றவர்கள் இப்பதவிக்கு எதிர்பார்க்கப்படுகிறது. வினாக்கள் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவிகளிலிருந்து கேட்கப்படும். அறிவியல் விதிகள், அறிவியல் உபகரணங்கள் கண்டுபிடிப்புகள், அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களது பங்கெடுப்புகள், மனிதனின் உடற்செயலியல், நோய்கள், அதன்விளைவுகள், நோய்களை சரிசெய்யும் முறை, அதை தடுக்கும்முறை, தேவையான உணவு உட்கொள்ளுதலின் மூலம் உடலின் சமநிலைகாத்தல், மரபியல், விலங்குகள், பாலூட்டிகள் மற்றும் பறவைகள், சுற்றுப்புறம், மற்றும் சூழ்நிலையியல்,சேர்மம் மற்றும் கலவைகள், அமிலம், காரம், உப்பு மற்றும் அதன் கலவைகள், இயக்கம், நியூட்டனின் இயக்க விதிகள், பொருட்களின் பண்புகள், மின்சாரம், தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட பகுதிகள் இவை
அனைத்தின் இயற்கை பண்புகள்.
உதாரணம் :-
1. நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
A) நெப்ரான் B) காற்று பைகள் C) நியூரான் D) மைட்டோகாண்ரியா
2. இதயத்தைச் சுற்றியுள்ள மெல்லிய படலத்தின் பெயர் என்ன?
A) பெரிகார்டியம் B) மெளினமிஜஸ் C) பினியூரா D) தலாமஸ்
3. வைரத்தின் மாறுநிலைக் கோணம்
A) 42.4° B) 34.4° C) 24.8* D) 24.4.
5.இந்திய வரலாறு: சிந்துசமவெளி நாகரிகம், வேதகாலம் ஆரிய மற்றும் சங்ககாலம் மற்றும் மௌரியவம்சம், புத்த மற்றும் ஜைன மதம் குப்தர்கள் மற்றும் வர்த்தமானர்கள், பல்லவர்கள், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் சுல்தான்கள்
மற்றும் முகமதியர்கள் காலத்திய முக்கிய நாட்கள் மற்றும் நிகழ்வுகள். ஐரோப்பியர்களின் ஆதிக்கம் குறிப்பாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மற்றும் அவர்களது ஆட்சிமுறை தற்போதைய நவீன இந்திய நிர்வாகம்.
உதாரணம் :-
1. கலிங்கம் என்பது தற்போதைய
A) ஒடிசா B) பஞ்சாப் C) ராஜஸ்தான் D வங்காளம்
2. ஆற்காட்டு வீரர் என்று புகழப்பட்டவர்
A) ரிப்பன் பிரபு B) புஸ்ஸி C) இராபர்ட் கிளைவ் D) கானிங் பிரபு
3. தென்இந்தியாவில் உப்பு சத்தியாகிரகத்தை முன்னின்று நடத்தியவர்
A) காந்தி B)இராஜகோபாலாச்சாரியார்
C)காமராஜர் D) நேருஜி
6.புவியியல் : புவி, புவியின் இயக்கம், வட்டப்பாதையில் சுற்றுதல் தன்னைத்தானே சுற்றுதல் மற்றும் அதன் விளைவுகள், புவியின் அமைப்பு, இந்தியா அமைந்துள்ள இடம், காலநிலை, பருவகால மாற்றங்கள் மற்றும் வானிலை, மழை
பொழிவு, இயற்கை சீற்றங்கள் அல்லது அழிவுகள், பயிர்கள் பயிரிடும்முறை, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்கள்,மலைப்பிரதேசங்கள்,தேசிய பூங்காக்கள், முக்கிய துறைமுகங்கள், பயிர்கள் மற்றும் தாதுக்கள், முக்கிய தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள், காடு மற்றும் காடுசார்ந்த வாழ்க்கைகள், மக்கள் தொகை பரவல் மற்றும் அதன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள்.
உதாரணம் :-)
1. இந்தியாவின் மேற்கில் அமைந்துள்ள தீபகற்பம்
A) ஆஸ்திரேலியா B) ஸ்ரீலங்கா C) இந்தோனேசியா D) அரேபியா
2. இந்தியாவின் குறுக்காக ஓடும் சிறப்பு அட்சம்
A) மகரரேகை B) கடகரேகை C) துருவவட்டம் D) நிலநடுக்கோடு
3. இலங்கையை இந்தியாவிலிருந்து பிரிக்கும் நீர்சக்தி
A) பாக்நீர் சந்தி B) பாலக்காட்டு நீர் சந்தி C) மன்னார் நீர் சந்தி D) ஜஸ்வால
7. இந்திய தேசிய இயக்கம் : இந்திய தேசிய விடுதலை இயக்கம் மற்றும் விடுதலை அடைதல். விடுதலை போராட்டத்தில் பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் பலர்.,
8.இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு.
மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரம், சுப்ரமணியசிவா, இராஜாஜி
மற்றும் மற்றவர்களின் பங்களிப்பு.
உதாரணம் :-
1. பூமிதான இயக்கத்தினை தொடங்கியவர்
A) நேரு B) காந்தியடிகள் C) ஆச்சார்ய வினோபாபாவே D) ராஜீவ் காந்தி
2. நமது இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர்?
A) திரு. நேருஜி B) வல்லபாய் படேல் C) திருமதி. இந்திராகாந்தி D) Dr. இராஜேந்திரபிராசாத்
3. நேரு அரசு பின்பற்றி பொருளாதாரக் கொள்கை
A) தனியார் மயம் B) கலப்புப் பொருளாதாரம் C) உலக மயம் D) தாராள மயம்
9. நடப்பு நிகழ்வுகள் : சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ச்சிகள், இந்திய அரசியல் அமைப்பின்
வளர்ச்சிகள், புதியதொழில் வளர்ச்சி, போக்குவரத்து மற்றும் தொலைதொடர்பு, வரலாற்று நிகழ்வுகள். இந்திய நுண்கலைகள்,
நடனம், நாடகம், திரைப்படம், ஓவியம், முக்கிய இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள், விளையாட்டுகள், தேசிய பன்னாட்டு விருதுகள், தேசிய பன்னாட்டு நிறுவனங்கள், ஆங்கில சுருக்கப்பட்ட எழுத்துகளின் விரிவாக்கம், புத்தகம் மற்றும் அதன்
எழுத்தாளர்கள், பிரபலங்களின் புனைப்பெயர்கள், பொது தொழில்நுட்பம், இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும், இன்றைய
தினத்தைய இந்திய மற்றும் அதன் தொடர்புடைய விவரங்கள், கலை, இலக்கியம், இந்தியப்பண்பாடு மற்றும் தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள்.
உதாரணம் :-
1. பாண்டிச்சேரியின் தற்போதைய துணை நிலை ஆளுநர்
A) வைத்தியலிங்கம் B) ரங்கசாமி C) கிரண்பேடி D) நாராயணசாமி
2. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த 2016 ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற
இந்திய வீராங்கனை
A) சாக்ஷி மாலிக் B) சிந்து C) தீபா கர்மாகர் D) ஜெய்ஷா
3. தமிழகத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை
A) 123 B) 215 C) 234 D) 178
பகுதி-ஆ
உளவியல்(Psychology)
அறிவாற்றலால் புரிந்து கொள்ளும் திறன்: இப்பகுதியில் உள்ள வினாக்கள், போட்டியாளர்கள் வினாக்களை புரிந்துகொண்டு அவரவர் புத்திக்கூர்மையை பயன்படுத்தி அதன் காரணமாக உண்மைகளை கண்டுபிடித்து பதிலளிக்கும் வண்ணம் இருக்கும். மேலும் இப்பகுதியில், பள்ளியில் உள்ள அடிப்படை மற்றும் எளிமையான கணித வினாக்களை
கொண்டதாகவும் இருக்கும்.
உதாரணம் :-
1. WOLF என்பது FLOW ஆனால் 8526 என்பது?
A) 2856 B) 6258 d) 5862 D) 5682
2. 0.5, 0.55, 0.65, 0.8, ?
A) 0.9 B) 0.82 C) I D) 0.95
3. இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து எந்த நாளாக இருக்கும்?
A) திங்கட்கிழமை B)வெள்ளிக்கிழமை C) புதன்கிழமை D) சனிக்கிழமை
POLICE CONSTABLE (PC EXAM) SYLLABUS PDF DOWNLOAD HERE.
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
0 Comments