Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

THIRUKKURAL ATHIKRAM 1 (KADUVUL VAALTHU) KURALKAL

திருக்குறள் - அதிகாரம் - 01  
கடவுள் வாழ்த்து


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு- 01
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
   
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
 நற்றாள் தொழாஅர் எனின்-02.
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 நிலமிசை நீடுவாழ் வார்.- 03
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.
   
வேண்டுதல் வேண்டாமை இலானடி 
 சேர்ந்தார்க்கு
 யாண்டும் இடும்பை இல
.- 04
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
 பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு- 05
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
   
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
 நெறிநின்றார் நீடுவாழ் வார்- 06
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது- 07
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.
   
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
 பிறவாழி நீந்தல் அரிது- 08
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
 தாளை வணங்காத் தலை- 09
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
   
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
 இறைவன் அடிசேரா தார்- 10
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.
100


Click here to read again





Post a Comment

0 Comments